ரிதிதென்னையில் மற்றுமொரு மோட்டார் சைக்கில் விபத்து: 2 பேர் காயம்

0
153

(முகம்மது அஸ்மி)

13934881_1438179842862493_3146745015908629000_nஇன்று (14) காலை (சற்று நேரத்துக்கு முன்பு) மட்டு-கொழும்பு ரிதிதென்னை பிரதான வீதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயமடைந்த நிலையில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள் வீதி ஊடாக வயல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒரவரே தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் பிரதான வீதியில் மோட்டார் போக்குவரத்து பொலிசாரை அவதானித்த அவர்கள் பதற்றமடைந்து சட்டென வீதியில் திரும்பிய வேளை பின்னால் வந்த வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

14034754_1438179632862514_1555958476755907892_n 13729125_1438179526195858_3556528105241618302_n

LEAVE A REPLY