காத்தான்குடி MOH பின் வீதி கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு

0
128

(M.T. ஹைதர் அலி)

DSC_2062காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள MOH பின் வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக மக்கள் பயன்பாட்டையுடைய இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. மழை காலங்களில் இவ்வீதியில் அதிகமான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அமுல்ப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக ரூபா பத்து லட்சம் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன் போது இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

DSC_2055DSC_2056

LEAVE A REPLY