“காத்தான்குடி சமூக குழுமம்” சார்பாக நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தரங்கில் கோரிக்கைகள் கையளிப்பு

0
195

IMG-20160813-WA0103நல்லிணக்க பொறிமுறைகள் செயல்முறைகள் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை திரட்டும் நிகழ்வில் காத்தான்குடி சமூக (KKY COMMUNITY) வட்சப் குழுமம் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தது.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுதற்கான செயலணி நேற்று மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில் உண்மை, நீதி, இழப்பீடு, மீள் நிகழாமைக்கான பொறிமுறைகள்பற்றி உங்கள் கருத்துக்களைக் கலந்துரையாடுங்கள், அதற்கான உங்கள் கருத்து என்ன? என்ற தொனிப்பொருளில் ஆரம்பமானது.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய பொதுமக்கள் கருத்தறியும் வலயச் செயலணியின் அமர்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதில் காத்தான்குடி சமூகம்சார்பாக கலந்துகொண்ட எமது வட்சப் குழும உறுப்பினர்கள் பின்வரும் ஆலோசனைகளை எழுத்துமூலம் சமர்ப்பித்தனர்.

அம்சங்கள்

01.தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்புக்களில் முஸ்லிம்கள் ஒரு தரப்பாகப்கொள்ளப்பட வேண்டும் அல்லது இனைக்கப்படல் வேண்டும்.

02.முஸ்லிம்கள் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்பது உள்வாங்கப்படல் வேண்டும்

03.1990 ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்குற்படுத்தப்படல் வேண்டும்.

04.1990 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களுக்கும் பொறுப்பாகவிருந்த புலிகளின் அப்போதைய தளபதிகளான கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்குற்படுத்தப்படல் வேண்டும்.

05.ஏறாவூர், அழிஞ்சுப்பொத்தானை பள்ளிவாயல் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

06.1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் வாழ்வோர் மீண்டும் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்.

07. யுத்தத்தினால் தொழில் ரீதியான இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும்.

08. காணமற்போனோர் தொடர்பாக நிறுவப்படும் அலுவலகமானது மாவட்ட மட்டத்தில் நிறுவப்படல் வேண்டும்.

09.யுத்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான உரிய இழப்பீடுகளை வழங்கும் வகையில் இழப்பீட்டுக்கான செயலகம் மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படல் வேண்டும்.

10. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஒருவர் அது தொடர்பில் தான் என்ன எதிர் பார்க்கின்றேன், எவ்வகையான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றேன் என்பதனை விசேட நீதிமன்டறம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான விசேட நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்.

11.யுத்தகாலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் அல்லது இதுவரை உண்மைகள் வெளிக்கொண்டு வராத படுகொலைகள், கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் உண்மையினை கண்டு பிடிப்பதிற்கான செயல் முறை உறுவாக்கப்படல் வேண்டும்.

12. உண்மை கண்டறிப்படும் இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோரல், பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பளித்தல் போன்ற செயல்முறைக்கான முறையான வேளைத்திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

13. யுத்தத்தினால் குறிப்பாக தழில், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உறுவாகியுள்ள மனக்கசப்புக்கள் முரண்பாடுகள், இனவாத உணர்வுகள், மதவாத உணவுகள் என்பவற்றை கலைந்து நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் மாவட்ட செயலகம் பிரதேச செயலக மட்டத்தில் தேசிய நல்லிணக்க வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்

14. கடந்த கால நிகழ்வுகள் நிகழாதிருப்பதினை உறுதிப்படுத்தும் வகையில் முன்பள்ளிகள், பாடசாலை, பல்கலைக்கழகம், சமூக நிறுவனங்களுக்கு ஊடாக விழிர்ப்புணர்வு வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

15. இலங்கையில் இன ரீதியாகவேளைத்திட்டங்கள், அபிவருத்தி, அரசியல்சார் செயற்பாடுகளை முன்னைடுப்பதனை தவிர்த்து சமுகநீதி, மனிதநலன் என்ற அடிப்படையில் ஒழுங்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

மேற்குறிப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டும், எழுத்து மூலமாகவும் இங்கு கையளிக்கப்பட்து.

இந்த நிகழ்வில் காத்தான் சமூக குழுமம் சார்பாக

M.I.M பஸ்ஹான்
A.M பர்சாத்
M.B.M ரம்ஸுதீன்
M.I.M ரகீப்மெளலவி
M.S.M ஹில்மி
M.M ஹானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mohammed Rifath
Admin
“KATTANKUDY COMMUNITY”

IMG-20160813-WA0099 IMG-20160813-WA0100 IMG-20160813-WA0102 IMG-20160813-WA0104

LEAVE A REPLY