புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்குவின் அட்டகாசம்: மாகாண சபை உறுப்பினர் அன்வரின் பார்வைக்கு

0
399

(அஹமட் இர்ஷாட்)

____ ________புல்மோடடை அரிசிமலை பகுதியில் 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிகாப் நிறுவனத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு கடறப்டையினரால் 2008ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் மாகாண சபை உறுப்பினர் ஆர். எம்.அன்வர் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்களின் முயற்ச்சியால் கடந்த பெப்ரவரி மாதம் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் காலித் எனும் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த கட்டிடங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது அரிசிமாலையை சேர்ந்த பௌத்த பிக்கு குறித்த வீட்டை நாசப்படுத்தி தனக்கு சொந்தமாக்கும் நோக்கில் மேலதிக கட்டுமான பணிகளை மேட்கொண்டார். பின்னர் உரியவரிடம் தனது பொருட்களை தரும்படி அடிக்கடி பிரச்சினையை ஏட்படுத்தி வந்தார்.

நேற்று (12) காலித் சுகயீனம் காரணமாக வைத்திய சாலை சென்ற வேலை பௌத்த பிக்கு மூன்று நபர்களை அனுப்பி குறித்த வீட்டின் கதவுநிலை, ஜன்னல் மற்றும் கூரைகளை கழட்டுவதற்காக முழு வீட்டையும் நாசப்படுத்தி இருக்கின்றார்.

04பின்னர் நேற்றைய தினம் திடீரென புகுந்த காலித், வீடு உடைக்கப்படும் நிலையை கண்டவுடன் குறித்த மூவரும் ஓடி ஒழிந்த நிலையில் பின்னர் பொருட்களை பெரும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர், போலீசார், கிராம சேவகர் அனைவரும் குறித்த பகுதிக்கு சென்று மேலும் பிரச்சினைகளை பெருதாக்கிய நிலையில் காலித் என்பவர் கொழும்பு சென்றிருந்த மாகாண சபை அன்வரோடு தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிகாரிகளோடு மாகாண சபை உறுப்பினர் பேசியதன் பின்னர் விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்தில் இருந்து அனுப்பப்பட்டதோடு குறித்த பகுதிக்கு சென்ற உதவி போலீஸ் அதிகாரியுடனும் தொலைபேசியுடனாக பேசியதுடன் மாகாண சபை உறுப்பினர் அன்வர், தான் அரசாங்க அதிபரோடும் பிரதேச செயலாளரோடும் வருகை தந்து தீர்ப்பதாக கூறிய வாக்குறிதியினை அடுத்து அனைவரும் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

அதனை தொடர்ந்து காலித் புல்மோடடை போலீஸ் நிலையத்தில் குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் இன்று (13) காலை 11 மணியளவில் குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான போலீஸ் அத்தியட்சகர் குறித்த பகுதிக்கு சென்று பௌத்த பிக்குவின் பொருட்களை கையளித்ததுடன் காலித் என்பவர் தனது வீட்டிற்கு ஏற்டபட்ட சேதத்திற்கு நஷ்ட்ட ஈடு வழங்கினால் மாத்திரமே முறைப்பாட்டினை தான் வாபஸ் பெறமு டியும் என போலீஸ் அத்தியட்சகரிடம் கூறினார்.

03 02

LEAVE A REPLY