ஆஸிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி இன்று: தொடரை வெள்ளையடிக்கும் நோக்கில் இலங்கை

0
165

24col9207அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை வெள்ளையடிக்கும் நோக்கில் களமிங்கவுள்ளது இலங்கை அணி

இலங்கை-அவுஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டம் இன்று கொழும்பு எஸ்.எஸ் .சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் அரங்கில் தனது முதன்மை ஸ்தானத்தை தக்கவைக்கும் நோக்கில் களமிறங்குகிறது. ஆனால் தொடரை தோற்றால் முதனிலையை இழக்க நேரிடும். கண்டி,காலி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் களமிறங்க காத்திருக்கும் ஆஸி. இலங்கை அணியை பொறுத்தவரை ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால் இலங்கை அணி பெற்ற வரலாற்று வெற்றியாகவும் இது பதிவாகும்.

அவுஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 177 டெஸ்ட் தொடரில் நான்கு முறை மாத்திரமே தொடரை இழந்துள்ளது. 0-3 இங்கிலாந்து அணிக்கு எதிராக 1886ம் ஆண்டும், 0-4 தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 1969/70 ஆண்டில், 0-3 பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1982-83 ம் ஆண்டு மற்றும் 0-4 இந்திய அணிக்கு எதிரான 2012/13 ம் ஆண்டுமே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. அவ்வணியின் தலைவர்களான டப் ஸ்கொட், பில் லவரி, கிம் கீயூஜ் மற்றும் மைக்கல் கிளார்க் ஆகியோரின் தலைமையில் இந்த சோக நிகழ்வு இடம்பெற்றது. இந்த பட்டியலில் ஸ்மித் இணைந்து கொள்வாரா என்பது இவ் டெஸ்ட் தொடரில் தெரியவரும்.

இலங்கை அணியை பொறுத்தவரை தனது கிரிக்கெட் வரலாற்றில் 50 டெஸ்ட் தொடர்களை சந்தித்ததில் மூன்று தொடரை மாத்திரமே வென்றுள்ளது. 0-3 வீதம் சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளையும் 2001 ம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணியையும் வென்றிருந்து. அந்த இடத்தை மெத்திவ்ஸ் தலையிலான அணி தக்கவைக்குமா பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தொடரை கைப்பற்றிய அணித்தலைவர்கள் வரிசையில் சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன பெற்றிருந்தனர். அந்த இடத்துக்கு மெத்திவ்ஸ் செல்வாரா. ஆஸி அணிக்கு இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஐ.சி.சியினால் முதன்மை அணிக்கான கிரீடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியை பொறுத்தவரை ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா ஆகியோர் ஆஸி துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய வைத்தனர். பெரேரா இந்த தொடரில் 11 விக்கெட்டை வீழ்த்தினார். அதில் காலி டெஸ்ட் ஆட்டத்தில் 10 விக்கெட்டை பதம் பதார்த்தார் அவர்.

அது மட்டுமல்ல அவர் 11 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 விக்கெட்டை விரைவாக கைப்பற்றியவர் என்ற மைல்கல்லையும் அவர் நிலைநாட்டினார். ஹேரத், சந்தகன் ஆகியோரும் உள்ளதால் ஆஸிக்கு கொழும்பு டெஸ்ட்க டினமாக இருக்கும். ஆஸி அணி சார்பாக ஸ்டோக் இந்த தொடரில் 17 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

ஆனால் இலங்கை ஆடுகளத்தில் ஆஸி துடுப்பாட்டக்கார்களுக்கு கடினமானதாகவுள்ளது. காலி மைதனத்தில் ஆஸி வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 94 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டை கைப்பற்றியது இலங்கையில் முதற்தடவையாகும். ஆஸி பந்து வீச்சாளர் ஒருவர் ஆசிய மண்ணில் 1970 க்கு பிறகு பெற்ற அதி சிறந்த பந்து வீச்சு பிரதியாகும். அவுஸ்திரேலிய அணி ஆசிய மண்ணில் 17 போட்டிகளில் ஆடி 2001ம் ஆண்டு கண்டி பல்லேகல மைதானத்தில் பெற்ற ஒரு வெற்றியே அவ்வணி பெற்ற வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டிகளில் சரியாக பிராகசிக்காத திமுத் கருணாரத்தன அணியில் இருந்து நீக்கப்பட்டு மத்திய வரிசையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்னம் இலங்கை அணியின் தேர்வாளர்களுக்கு இருக்கும்.

#Thinakaran

LEAVE A REPLY