(Photos) விபத்தை தவிர்க்க காத்தான்குடி பிரதான வீதியில் வேகத்தடுப்பு கடவை கோடுகள்

0
63

(M.T. ஹைதர் அலி)

HRS_5739காத்தான்குடி பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக கடந்த 2016.04.19ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வீதி விபத்தினை தடுப்பதற்கு பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டு ஒவ்வொன்றாக அவை செயற்படுத்தப்பட்ட வண்ணமுள்ளன.

HRS_5650அந்த வகையில் பிரதானமாக இனங்காணப்பட்ட நான்கு இடங்களான மீரா பாலிகா முன்பாகவுள்ள நான்கு மூலை சந்தியும், குட்வின் சந்தி, மெத்தைப்பள்ளி சந்தி மற்றும் டெலிகொம் சந்தி ஆகிய இடங்களில் வேகத்தைக் குறைக்கக்கூடிய வேகத்தடுப்புக்களையும் அமுல்ப்படுத்துவதோடு, ஊருக்குல் இருந்து பிரதான வீதிக்கு வருகின்ற வீதிகளில் நிறுத்தல் கோடுகளை அமைப்பது சம்மந்தமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் (10) புதன்கிழமை பிரதான வீதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு எந்தெந்த இடங்களில் வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட வேண்டுமோ அவ்விடங்கள் இணங்காணப்பட்டதோடு, எதிர்வரும் இன்று (12) வெள்ளிக்கிழமை இவ்வேலைகளை ஆரம்பிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.

அதற்கமைவாக இன்று வேகத்தைக் குறைக்கக்கூடிய வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட்டன.

வேகத்தடுப்புக்களை சரியான இடங்களில் அமைப்பதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவதானிப்பதற்காகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்விடங்களுக்கு நேரில் சென்று அவதானித்தார்.

HRS_5702 HRS_5727 WhatsApp Image 2016-08-12 at 23.53.58 (1) WhatsApp Image 2016-08-12 at 23.53.58 (3)

LEAVE A REPLY