விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்ததும் உயிர் பிரிந்த சோகம்

0
114

201608121718378631_Pregnant-woman-injured-in-crash-Baby-is-born-The-tragedy-had_SECVPFகனடா நாட்டில் சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் உதவியால் குழந்தை பத்திரமாக பிரசவமாகியுள்ள சம்பவம் அனைவர் மனதிலும் பெரிய உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் குயூபெக் நகரில் உள்ள லவுரியர் சாலையில் நேற்று காலை 10.15 மணியளவில் குயூபெக் சிட்டி மருத்துவமனைக்கு அருகில் 27 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

சாலையின் மையத்தில் உள்ள நடைபாதை வழித்தடத்தில் அவர் நடந்துச் சென்றுள்ளார். அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதியுள்ளது.

கார் மோதிய வேகத்தில் அவர் சில அடி தூக்கி வீசப்பட்டார். கர்ப்பிணி பெண்ணை மோதிய கார் ஒரு இரும்பு தூண் மீது மோதி நின்றுள்ளது.

விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த நபர்கள் உடனடியாக விரைந்து வந்து கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். விபத்துச் செய்தியை கேட்டு கியூபெக் மருத்துவர்கள் ஒரு குழுவுடன் உடனடியாக அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

கர்ப்பிணி பெண்ணிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுருந்ததால் அவர் உயிருக்கு போராடியுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதே சமயம், அவர் நிறைமாத கர்ப்பிணி என்பதால், அவரது உயிர் உடலில் இருந்தபோது பெண் குழந்தை ஒன்று பாதுகாப்பாக பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சில நிமிடங்களில் தாயாரின் உயிர் பிரிந்துள்ளது. எனினும், பெண் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அவரது உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கார் ஓட்டி வந்த 20 வயது நபருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தற்போது அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணை நடத்தி வரும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY