இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி செல்போன் சேவை தடை

0
79

201608122107515302_Mobile-phone-services-to-be-suspended-in-Islamabad-on-August_SECVPFபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி செல்போன் சேவை தடைசெய்யப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் சுதந்திர தின நாளை கொண்டாடும் போது, தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி செல்போன் சேவைக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுதந்திர தினம் அன்று காலை 6:00 மணியில் இருந்து 12 மணிவரையில் செல்போன் சேவைக்கு தடைவிதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையத்திற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதிஉள்ளது. பாகிஸ்தானில் முக்கிய நாட்களில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு கருதி செல்போன் சேவைக்கு தடைவிதிப்பது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்று.

LEAVE A REPLY