ரியோ ஒலிம்பிக்: 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இருவருக்கு தங்கப்பதக்கம்

0
124

la-sp-simone-manuel-penny-oleksiak-20160811தனி நபர் பிரிவில் இருவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்த அரிய போட்டி ஒன்று ரியோ ஒலிம்பிக் விழாவில் இன்று பதிவானது.

மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க மற்றும் கனேடிய வீராங்கனைகள் இந்த சிறப்பு வெற்றியை ஈட்டினர்.

மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியை அமெரிக்காவின் சிமோன் மனுவேல் மற்றும் கனடாவின் பெனி ஒலிக்சியெக் 52.70 செக்கன்ட்களில் கடந்தனர்.

இது இந்தப் போட்டிப் பிரிவுக்கான ஒலிம்பிக் சாதனை என்பதுடன் இருவருக்குமே தங்கப்பதக்கம் கிடைக்கவும் வழிவகுத்தது.

பெனி ஒலிக்சியெக்கிற்கு 16 வயதாகின்றது என்பதுடன் அவர் ரியோ ஒலிம்பிக் விழாவில் பெற்ற நான்காவது பதக்கமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

20 வயதுடைய சிமோன் மனுவேலுக்கு இது முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.

அத்துடன், நீச்சல் போட்டிகளில தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் கறுப்பின அமெரிக்க பெண் என்ற சிறப்பையும் சிமோன் மனுவேல் பெற்றார்.

இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விழாவில் மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியை அமெரிக்க வீராங்கனைகள் இருவர் ஒரே நேரப்பெறுதியில் கடந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

LEAVE A REPLY