பிலிப்பைன்ஸ் சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு- துப்பாக்கி சூடு: 10 கைதிகள் உயிரிழப்பு

0
151

201608122054406842_Prison-break-gone-wrong-10-killed-blast-inside-Philippines_SECVPFபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் அதன் தொடர்புடைய குற்றங்களை கட்டுப்படுத்த அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இதன் காரணமாக போதைப்பொருள் டீலர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், தலைநகர் மணிலா புறநகர்ப்பகுதியான பரானாக்கில் உள்ள சிறையில் நேற்று திடீரென குண்டு வெடித்தது. கைதிகள் சிலர் வார்டனை சந்திக்கச் சென்றபோது அப்பகுதியில் குண்டு வெடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்தது. இதில் போதைப்பொருள் விற்கும் டீலர்கள் உள்ளிட்ட 10 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் சிறை வார்டன் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது சிறையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்லும் முயற்சியாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் – தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

LEAVE A REPLY