அதாஉல்லா கட்டிய கட்டிடங்களுக்கு பெயர் வைக்கும் ஹக்கீம்…!

0
103

(எம்.ஜே.எம். சஜீத்)

Rauf Hakeem 12திறப்புவிழா அமைச்சர் ஓர் இரு நாட்களில் அம்பாரையை நோக்கி படை எடுக்கவுள்ளார். 2007ம் ஆண்டு கிழக்கின் சுத்தமான நீர் எனும்தலைபில் Jica திட்டத்தின் ஊடாக அப்போதைய அமைச்சர் A.L.M.அதாஉல்லாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர் உந்தும் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை தாளவட்டுவான் நீர் இறைக்கும் Pum House கட்டிடத்தை இரண்டாம் முறை திறப்பதர்காக திறப்பு விழா அமைச்சர் வருகை தரவுள்ளார். அதாஉல்லாவின் பின்னர் நீர் வழங்கல் அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தனா மேலதிக வேலைகளுக்காக 2013ம் ஆண்டு மகிந்த சிந்தன திட்டத்தின் ஊடாக பணத்தை பிரதானகுழாய் இணைப்புக்காக ஒதுக்கியுள்ளார்.

இத்திட்டமானது 2014ம் ஆண்டுடன் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் ஓர் இரு திணங்களிள் மீண்டும் திறக்க திறப்புவிழா அமைச்சர் வரவுள்ளார். அன்மையில் பொத்துவில் பிரதேசத்திலும் ஒரு திறப்பு விழா செய்தார். ஆனால் அந்த மக்களுக்கு இன்னும் தண்ணீர் போய் சேரவில்லை என பல போராட்டங்களை அம்மக்கள் செய்து வருகின்றனர்.

hak q

LEAVE A REPLY