வெருகலில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைந்து கொத்தணி வேலைத் திட்டம்

0
147

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (1)கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் முன்வைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை இணைத்து மேற்கொள்ளப்படும் விஷேட கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேச சபை நிருவாகத்திற்குட்பட்ட 450 மீற்றர் நீளமான வட்டவான் வீதி செப்பனிடும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 12, 2016) இடம்பெற்றதாக பிரதேச சபைச் செயலாளர் எம்.எச். பாத்திமா ஷபீகா தெரிவித்தார்.

இந்த கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் கந்தளாய், சேருவில மற்றும் வெருகல் பிரதேச உள்ளுராட்சி மன்றங்கள் இணைந்து பணியாற்றின.

இந்த மூன்று பிரதேச சபைகளின் ஆளணியினர் சுமார் 75 பேரும், இயந்திராதிகளும், உட்பட வெருகல் பிரதேச பொதுமக்களும் இணைந்து இந்த கொத்தணி சிரமதான வேலைத் திட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என்று வெருகல் பிரதேச சபையின் தலைமை லிகிதர் எம். தவமுரளீதரன் தெரிவித்தார்.

இந்த கொத்தணி வேலைத் திட்டத்தின் மூலம் செப்பனிடப்பட்ட வட்டவான் வீதி அப்பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்குப் பேருதவியாக அமையும் என வெருகல் பிரதேச சபையின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. தினேஷ்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY