வடபகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் வகையில் தெல்லிப்பளையில் அலுமீனியத் தொழிற்சாலை நாளை திறந்து வைப்பு

0
136

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

sri-lanka-northவடபகுதி இளைஞர் யுவதிகள் பலருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் வகையில் தெல்லிப்பளையில் அலுமீனியத் தொழிற்சாலை சனிக்கிழமை (ஒகஸ்ட் 13, 2016) திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை இந்திய கம்பனிகளின் இயக்குநர் ரீ. தில்லைராஜ் தெரிவித்தார்.

எலிபெண்ட் மெட்டல் அன்ட் அலுமீனியம் வேர்க்ஸ் பிரைவேற் லிமிட்டெட் (Elephant Metal & Aluminium Works (PVT) Limited) நிறுவனம் இந்த தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளது.

சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பானம் அம்பானை தெல்லிப்பளையில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலைத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இந்திய தூதரகத்தின் யாழ் இணைத்தூதரக இணைத்தூதுவர் என். நடராஜன் உட்பட வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட இத்தொழிற்சாலை இன்னும் பல கிளைகளை வடக்கிலும் கிழக்கிலும் நிறுவவுள்ளதாக இலங்கை இந்திய கம்பனிகளின் இயக்குநர் ரீ. தில்லைராஜ் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY