யாழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் இந்தியக் கம்பனி திறப்பு விழா

0
148

unnamedஎலிபெண்ட் மெட்டல் அண்ட் அலுமினியம் வேர்க்ஸ் பிரைவட் லிமிட்டடின் அலுமினியத் தொழிற்சாலை திறந்துவைக்கும் நிகழ்வு நாளை 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00மணிக்கு யாழ்ப்பானம் அம்பானை தெல்லிப்பனையில் பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குணர் தி.தில்லைராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை ஆளுணர் ரெஜினேட் குரே, கெளரவ விருந்தினர்களாக: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பெண்கள் விவகாரப் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் இந்திய இணைத்தூதரகத்தின் இணைத்தூதுவர் நடராஜான் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் அமைச்சர்களான டெனிஸ்வரன், ஐங்கரநேசன் , உறுப்பினர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் அமையப்பெற்ற இத்தொழில் நிலையம் இன்னும் பல கிளைகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்து இன்னும் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY