தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்புக்கு 4 பேர் பலி – பலர் காயம்

0
141

201608120905564718_Four-dead-as-Thailand-hit-with-string-of-blasts_SECVPFதாய்லாந்து நாட்டின் ஹூவா ஹின் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி சொகுசு விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. நேற்றிரவு சுமார் 10 மற்றும் 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஒரு பெண் பலியானார். வெளிநாட்டவர்கள் உட்பட பத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி விலகும் முன்னர் இன்று காலை மீண்டும் அதே பகுதியில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.

இதுமட்டுமின்றி, கடற்கரையோர சுற்றுலாத்தலமான புக்கெட், தீவு நகரமான சுரத் தானி மற்றும் தெற்கு டிராங் ஆகிய பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தெரியவந்துள்ளது.

மேற்கண்ட 8 குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் 4 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY