ரிதிதென்ன கோர விபத்து: இராணுவ வீரர்கள் இருவரும் பலி

0
155

(வாழைச்சேனை நிருபர்)

WhatsApp Image 2016-08-11 at 18.16.53மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ரிதிதென்ன பிரதேசத்தில் நேற்று (11) இடம் பெற்ற வாகன விபத்தில் தொப்பிகல் இராணுவ முகாமில் கடமை புரியம் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு பகுதிக்கு வந்து திரும்பிச் சென்ற பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த எல்ப் லொறியும் அனுராதபுரம் பகுதியில் இருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் ரிதிதென்ன பகுதியில் 109வது மைல் கல்லுக்கும் 110வது மைல் கல்லுக்கும் இடையில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

WhatsApp Image 2016-08-11 at 18.16.53 (4)இவ்விபத்தில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இலுப்புகண்ணிய கலமிந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த கே.பி.நிஹால் பண்டார (வயது – 47) என்பவர் காயமடைந்த நிலையில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலநின்றி உயிர் இழந்துள்ளதுடன் இவருடன் பயணித்த கலகஸ்வௌ, மதவாச்சியைச் சேர்ந்த கே.பி.என்.குணரத்ன (வயது – 38) என்ற இராணுவ வீரர் காயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து பொலநறுவை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இரண்டு இராணுவ வீரர்களும் விடுமுறையில் தங்களது பிரதேசங்களுக்குச் சென்று நேற்று மாலை 06.00 மணிக்கு கடமைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

LEAVE A REPLY