வயோதிபரொருவரின் சடலம் மீட்பு

0
122

(அப்துல்சலாம் யாசீம்)

Dead-body-in-morgue-006திருகோணமலை- கந்தளாய்  நீதிமன்றத்திற்கு பின்புறமாக உள்ள காணியில் காணாமல் போனதாக கூறப்படும் வயோதிபரொருவரின் சடலமொன்றினை இன்று (12) காலை மீட்டுள்ளத்க கந்தளாய்  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கந்தளாய்-பியந்த மாவத்தை இல27/20 இல் வசித்து வந்த எச்.ஏ.தோமஸ் சிங்ஹ (87வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டாருடன் கோபித்துக்கொண்டு சென்ற வயோதிபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இன்றைய தினம் உயிரிழந்தவரின் மகளினால் தந்தை காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY