யோசிதவின் 158 மில். ரூபா பணத்தை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு

0
95

47col8e3b37c7c77d377f0e391659b497b1_xl174554756_4647244_10082016_mff_cmyமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுடையது என நம்பப்படும் சுமார் 158 மில்லியன் ரூபா பணத்தை அரசுடமையாக்குமாறு கடுெவல நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டுள்ளது.

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு கிடைத்த 158 மில்லியன் ரூபா பணம் யோசிதவின் நெருங்கிய நண்பரான ரொஹானின் வங்கிக் கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தன்னுடையதல்லவென்றும் யோசிதவினுடையது எனவும் அவர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் கூறியுள்ளார். இது குறித்து பொலிஸார் நேற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.இதையடுத்து குறித்த பணத்தை அரசுடமையாக்குமாறு கடுெவல நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.

சி.எஸ்.என். அலைவரிசைக்கு முதலீடு செய்யப்பட்ட 234 மில்லியன் ரூபா பணத்தில் ஒரு பகுதி போலி கணக்கு வழக்குகள் மற்றும் சட்டபூர்வமற்ற வழிவகைகளினூடாக போலி ஆவணங்கள் ஊடாக பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இதேவேளை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன:

இதற்கமைய மோசடியாளர்களால் திருடப்பட்ட பணம் பொது மக்கள் பாவனைக்காக இன்று மத்திய வங்கியில் வைப்பிலிடப்படுவதாக அவர் தெரிவித்தார். மக்களுக்காக அதிகூடிய தொகையொன்று வைப்பிலிடப்படுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகுமென்றும் அமைச்சர் கூறினார்.

சி.எஸ்.என். அலைவரிசை மோசடி தொடர்பில் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் தொடரப்பட்டிருந்த வழக்கில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவுக்கு அமையவே இப்பணம் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். “இலங்கையிலிருந்து இப்பணம் சிங்கப்பூரிலுள்ள ஜி.பி.எல்.

இன்டர் தனியார் நிறுவனத்தில் வைப்பிடப்பட்டது. பின்னர் இப்பணம் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக லங்கா ஒரெக்ஸ் லீசிங் நிறுவனத்தில் இரண்டு நிலையான வைப்புக்களில் வைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் என்ட்ரெட் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரினால் இந்நிதி பான் ஆசியா வங்கியில் வைப்பிலிடப்பட்டது. இருப்பினும் என்டரெட் ஹோல்டிங் நிறுவனம் குறித்த பணத்திற்கு உரிமை கோர மறுத்தது. தாங்கள் இதனை வைப்புச் செய்யவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனால் இப்பணத்தை மத்திய வங்கிக்கு வழங்குமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டது. அதற்கமைய நீதிமன்றம் இன்று இப்பணத்தை மத்திய வங்கியில் வைப்புச் செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.

-Thinakaran-

LEAVE A REPLY