12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற கிரேக்கம்

0
141

annaaaரியோ ஒலிம்பிக் மகளிர் 25 மீ. பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கிரேக்கத்தின் அன்னா கோராகாகி (20) தங்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது கிரேக்கம். முன்னதாக, 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அந்நாடு தங்கம் வென்றிருந்தது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் கோராகாகி 8-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் மோனிகா கார்ஷை வீழ்த்தினார். ஸ்விட்சர்லாந்தின் ஹெய்தி டைத்லெம் கெர்பர் வெண்கலமும் வென்றார். முன்னதாக, 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் கோராகாகி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY