சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

0
99

unnamed (7)இலங்கை இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 108 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், கிரீன் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 258 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.3 பந்து ஓவர்களில் 149 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹோல்டன் 40 ஓட்டங்களையும், மலிக் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சை பொருத்தவரையில், தமித்த சில்வா 3விக்கட்டுகளையும், வனிது அசரங்க, அசலங்க மற்றும் பிரசான் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

LEAVE A REPLY