ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் குவைத்தை சேர்ந்த பெகைத் அல் துகானி

0
135

201608111539039267_Rio-Olympics-Kuwaiti-Athlete-Becomes-First-Independent_SECVPFபிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்றுள்ள நாடுகள் ஒலிம்பிக் கொடியின்கீழ் இப்போட்டியில் பங்கேற்கும். அங்கீகாரம் பெறாத நாடுகளின் வீரர்கள் சுயாதீன வீரர்களாக களமிறங்கலாம்.

அவ்வகையில், விளையாட்டில் அரசியல் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையைடுத்து குவைத் விளையாட்டு அணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட் செய்திருந்தது. இதனால் அந்நாட்டின் துப்பாக்கி சுடும் வீரரான பெகைத் அல் துகானி, சுயாதீன வீரராக ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் கலந்துகொண்டார்.

இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அல் தீகானி தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் சுயாதீன வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போட்டியில், இத்தாலி வீரர் மார்கோ வெள்ளிப் பதக்கமும், பிரிட்டன் வீரர் ஸ்டீவன் ஸ்காட் வெண்கலமும் வென்றனர்.

ராணுவ அதிகாரியான அல் தீகானி ஆறாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடுகிறார். இவரையும் சேர்த்து இந்த முறை ஒன்பது பேர் சுயாதீன வீரர்களாக பங்கேற்றனர்.

LEAVE A REPLY