சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டம்

0
174

(விசேட நிருபர்)

unnamed (2)சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று(11.8.2016) வியாழக்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி டி.எச்.சன்னியசூரிய மற்றும் உதவி ஆணையாளர் செல்வி சுதந்தி ஜெயசிங்க, சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி அஸா நிhடதா ஜெயந்த மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட உத்தியோகத்தர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

unnamed (3)இதன் போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி டி.எச்.சன்னியசூரிய ஆகியோருக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்ம்மில் மற்றும் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் காத்தான்குடி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றசூல்ஸா ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி டி.எச்.சன்னியசூரிய தலைமையில் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY