இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

0
41

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (1)இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்று நோய் அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்பக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் கூடுதலாக காணப்படுகின்றது என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இவர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளர்களின் மரண எண்ணிக்கையில் கூடுதலான மரணங்கள் வாய்ப் புற்றுநோய் மரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று பேர் என வருடாந்தம் 800 தொடக்கம் 900 வாய்ப்புற்று நோய் மரணங்கள் என வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய வந்திருப்பதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தை சேர்ந்த டாக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

‘புகைத்தல், வெற்றிலை, பாக்கு, புகையிலை உட்கொள்ளல் போன்ற பழக்கமுடையவர்கள் மத்தியில்தான் இந்த வாய்ப்புற்று நோய் அதிகம் காணப்படுகின்றது. அத்துடன் வாய்ச் சுகாதாரம் சரியான முறையில் பேணப்படாமையும் இந் நோய்க்குரிய மற்றுமோர் காரணியாக அமைகின்றது. இலங்கையில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கு 6 -7 வாய்ப் புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.

இந்நோயாளார்களில் 75 – 70 சதவீதமானோர் கடைசித் தறுவாயிலேயே வைத்தியசாலைகளை நாடுகின்றார்கள். வருடாந்தம் அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களில் 12 – 15 சதவீதம் வாய்ப் புற்று நோயாளர்கள். அதுபோல் 18 – 20 சதவீதம் மார்பக புற்று நோயாளர்கள்” எனவும் டாக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன் கூறினார்.

LEAVE A REPLY