சர்வதேச இஸ்லாமிய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

0
201

Muslim World Leagueஉலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

‘முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும்’ எனும் தலைப்பில் இன்று அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டில் பிர­தம அதி­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்­ள­வுள்ளார்.

இன்று காலை அல­ரி­மா­ளி­கையில் ஆரம்­பித்து வைக்­கப்­படும் இம் மாநாடு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், நாளை காலை 9 மணி­முதல் 11 மணி­வ­ரையும் பின்பு ஜும்ஆ தொழு­கை­யை­ய­டுத்து 3 மணி­முதல் 6 மணி­வ­ரையும் கொழும்பு விளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இம்­மா­நாட்­டுக்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் இலங்கை இஸ்­லா­மிய நிலை­யத்தின் தலை­வரும் முன்னாள் கொழும்பு மேயரும், சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூத­ரு­மான எம்.ஹுசைன் மொஹமட் மேற்­கொண்­டுள்ளார்.

சவூதி அரே­பியா, பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான், தாய்­லாந்து, பிலிப்பைன், இந்­தியா, தாய்வான், நேபாளம், கம்­போ­டியா, மியன்மார், சீனா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இலங்கைப் பிர­தி­நி­தி­களும் இதில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர்.

உலக இஸ்­லா­மிய லீக்கின் பொதுச் செய­லாளர் கலா­நிதி அப்­துல்லா பின் அப்துல் முஹ்ஸின் அல் துர்க்கி இம் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக கடந்த 7ஆம் திக­தி இலங்கை வந்­த­டைந்­துள்ளார்.

விளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டின் அமர்­வு­களில் மாற்று மதத்­த­லை­வர்­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சீனாவின் பௌத்த சம்­மே­ள­னத்தின் உதவித் தலைவர் சூசாங் தேரர், இந்­தியா கேர­ளாவைச் சேர்ந்த கலா­நிதி அப்துல் சலாம் எமா­யக்கர் அஹமட், பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் கலகே சும­ண­சிறி தேரர், தாய்­லாந்து பட்­டானி பல்­க­லைக்­க­ழக வேந்தர் கலா­நிதி இஸ்­மாயில் லுப்தி ஜவா­கியா, கலா­நிதி வர்மா ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மற்றும் பங்­க­ளாதேஷ் ஐம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் பேரா­சி­ரியர் அப்­தெல்மான் அபு­சத்தார் மொஹமட் மற்றும் கேரளா மேல் நீதி­மன்ற நீதி­பதி பி.கே.சம்­சுதீன், பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த கலா­நிதி அப்துல் கைர் டராசன், இலங்­கையைச் சேர்ந்த கலா­நிதி பச்­ச­மல அபித் ஹுசைன்­மியா ஆகி­யோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செய­லாளர் கலா­நிதி அல்­துர்க்­கியும் உரை­நி­கழ்த்­த­வுள்ள அதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மாநாட்டில் ஆய்­வ­றிக்­கை­யொன்­றி­னையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் மாநாட்டில் கலந்துகொள்வார்.

மேலும் ஹர­விந்தர் சிங் சர்மா, கலாநிதி எம்.மஸாஹர் செய்யத் மொஹமட், கலாநிதி டக் குங்சான், கலாநிதி மொஹமட் ருவைஸ் ஹனிபா, கலாநிதி சாந்திலால் கே.சோமையா, அகார் மொஹமட், கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் உட்பட மேலும் பலர் உரையாற்றவுள்ளனர்.

#Vidivelli

LEAVE A REPLY