தென் ஆப்ரிக்கா: 15 ஆயிரம் மின் ஊழியர் வேலைநிறுத்தம்

0
90

150331131950_eskom_2966791hதென் ஆப்ரிக்காவின் மின் நிறுவனமான எஸ்காமில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு நிர்வகிக்கும் இந்நிறுவனம், இந்த வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமானது என விமர்சித்துள்ளது; இருப்பினும் நிறுவனத்தின் செயல்பாடுகள் இதுவரை பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எஸ்காமின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்காக, தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள பிபிசி செய்தியாளர், நிதி நெருக்கடியில் உள்ள எஸ்காமின் நீண்ட பிரச்சினைகளில் இந்த வேலை நிறுத்தம் ஒரு சமீபத்திய பிரச்சனை எனவும் இந்நிறுவனம் நாட்டின் பழமைவாய்ந்த மின்சக்தி கட்டமைப்பை நவீனப்படுத்த போராடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

-BBC-

LEAVE A REPLY