இட்லி முட்டை உப்புமா செய்வது எப்படி

0
37

201608110722249176_how-to-make-egg-idli-upma_SECVPFதேவையான பொருட்கள் :

இட்லி – 4
முட்டை – 2
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 3
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இட்லியை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும்.

* முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். இட்லி நன்றாக உதிர்ந்து உதிரியாக வரும் அப்போது கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.

* சுவையான இட்லி முட்டை உப்புமா ரெடி.

* காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலையில் இட்லி முட்டை உப்புமா செய்து அசத்தலாம்.

குறிப்பு :

* இட்லி அதிகமாக புளித்து விட்டால் ப.மிளகாயை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

* டயட்டில் இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தியும் செய்யலாம்.

LEAVE A REPLY