பக்தாத் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து – 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி

0
104

201608101516333887_11-newborns-dead-in-Baghdad-hospital-blaze_SECVPFபக்தாத் நகரின் மேற்கு பகுதியில் யார்முக் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட மின்கசிவால் இங்குள்ள வளர்ச்சியடையாத சிசுக்களை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று தீ பிடித்தது.

மளமளவென்று பரவிய தீயில் சிக்கி 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட 26 குழந்தைகள் உடனடியாக பாக்தாத் நகரில் உள்ள இதர அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஹமத் அல் ருடெய்ன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY