மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்தப்பட்டு வைத்திய சாலையில் அனுமதி : ஆசிரியர் சபீர்கான் கைது

0
437

(அப்துல்சலாம் யாசீம்)

arrested2திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 11ம் ஆண்டு கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை இன்று (10) பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ பகுதியில் திருமணமாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா-பகுதியைச்சேர்ந்த டி.சபீர்கான் (33வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் அவசர அழைப்பான 119 எனும் இலக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY