மீண்டும் இலங்கை அணியுடன் இணைகிறார் சமிந்த வாஸ்

0
93

176663இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.சமிந்த வாஸ் இந்த மாத இறுதிக்குள் அணியுடன் இணைந்தக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (10) இலங்கை கிரிக்கட் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

சமிந்த வாஸ் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இலங்கை ஏ அணி, மற்றும் பிராந்திய அணிகள் என்பவற்றுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்குவதுடன், தேசிய கிரிக்கட் அணி உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிரிக்கட் அணிகளுக்குமான பந்துவீச்சு ஆலோசனையை வழங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு மிகவும் வீழ்ச்சிக் கண்டுள்ள நிலையில், அதனை இளம் வீரர்களடமிருந்து கட்டியெழுப்புவதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY