மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக தவறான செய்தி வெளியிட்ட இனைய தளங்களை கண்டித்து மட்டக்களப்பில் கண்டனப் பேரணி

0
285

(விசேட நிருபர்)

unnamed (11)மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக தவறான செய்தி வெளியிட்ட இனைய தளங்களை கண்டித்தும் தவறான செய்திகளை இணையதளங்கள் வெளியிடக் கூடாது எனக் கோரியும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களினால் இன்று(10.8.2016) புதன்கிழமை கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்டனப் பேரணியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிகாரிகள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தவறான செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கங்களை இந்த பேரணியில் ஈடுபட்டோர் கண்டித்தனர்.

unnamed (13)அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துடனும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக இருந்து சேவையாற்றி வரும் மண்முனை வடக்கு பிரதேச செயலார் ஏ.தவராஜா தொடர்பில் இரண்டு இணையதளங்களில் வெளி வந்த உண்மைக்கு புறம்பான செய்திகளை கண்டிப்பதாகவும் உண்மையை அறிந்து தகவலை உறுதிப்படுத்தி செய்திகளை வெளியிட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

இந்த கண்டனப் பேரணி மண்முனை வடக்கு பிரதே செயலகத்திற்கு முன்னாள் ஆரம்பமாகி மட்டக்களப்ப காந்திப் பூங்காவுக்கு முன்னாள் சென்று பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மகஜர் ஒன்றும் அவர்களிடம் கைளிக்கப்பட்டது.

unnamed (16)

unnamed (14)

LEAVE A REPLY