வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தண்ணீர் கட்டண முரண்பாட்டை ஷபீக் ரஜாப்தீன் தீர்த்து வைப்பு

0
170

(ஷபீக் ஹுஸைன்)

unnamed (10)அண்மையில் கொழும்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தண்ணீர் கட்டணங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லாம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்பின்பேரில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன்  தலைமையில் ஆகஸ்ட் 8,9,10 ஆம் திகதிகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் விசேட முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில் நீர் குழாய் உடைந்து கூடுதலாக வந்துள்ள பட்டியலுக்கு விலைக்கழிவும், மேலும் கூடுதலாக வந்துள்ள பட்டியலுக்கு தவனை அடிப்படையிலும் பட்டியலுக்கான பணத்தொகையை செலுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன்  ஏற்பாடு செய்துகொடுத்தார்.

LEAVE A REPLY