மைக்கல் பெல்ப்ஸிற்கு 21 ஆவது தங்கம்

0
88

100614-olympics-Michael-Phelps-TV-Pi.vresize.1200.675.high_.96தங்க மகன் என வர்ணிக்கப்படும் மைக்கல் பெல்ப்ஸ் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் சற்று முன்னர் நிறைவடைந்த 200 மீட்டர் பட்டர் ப்ளை (Butter Fly) மற்றும் 4 X 200 போட்டிகளில் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இதன்மூலம் தனது பதக்க பட்டியலில் மேலுமிரு தங்கப்பதக்கங்களை சேர்த்துள்ளார்.

இதுவரை இவர் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 25, இதில் 21 தங்கப்பதக்கங்கள் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும்.

இவ்விரு தங்கப்பதக்கங்களையும் சிறிய கால இடைவௌியில் இவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்த போட்டிப் பிரிவின் கீழ் மைக்கல் பெல்ப்ஸ் வௌ்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது 19 ஆவது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

4 பேர் கொண்ட குழுக்கள் கலந்து கொள்ளும் 100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் ‘பிரி ஸ்டைல்’ என்னும் பிரிவில் (4 X 100) அமெரிக்கக் குழுவில் மைக்கல் பெல்ப்சும் பங்குபற்றினார்.

31 வயதான பெல்ப்ஸ் கலந்து கொள்ளும் ஐந்தாவது ஒலிம்பிக் விழா இதுவாகும்.

LEAVE A REPLY