ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ FCIDஇல் ஆஜர்

0
123

Johnston-Fernandoமுன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அனுமதியின்றி லங்கா சதோச நிறுவனத்துக்காக 60,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக, இன்று(10) அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் அவர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY