(Poem) பொல்லாமைப் பரீட்சை

0
32

(Mohamed Nizous)

ஆராரோ ஆரிரரோ
அவசரமாய் எழுந்திடுவாய்
ஸ்கொலசிப் எக்ஸாமுக்கு
இப்பவே தயாராவாய்.

உலகத்துப் பேயெல்லாம்
உனக்குத் தெரியணும்
நிலவுக்கு போனதுவும்
நீ அறியணும்

பொலனறுவை மன்னனுக்கு
பொஞ்சாதி எத்தனை பேர்
பொறுமையாய் பாடமாக்கு
புதச்சிடுவன் இல்லாட்டி.

ஆட்டுக்கு பெண்பாலென்ன
ஆப்ரகாம் லிங்கன் யார்
கூட்டல் விருத்தி குறியீடு
கேட்டால் உடனே சொல்லணும்

ஓயாமல் படிக்கணும்
உறங்காமல் படிக்கணும்
………பேயாமல் படிக்கணும்
பேசாமல் படிக்கணும்

டியூசன் போகணும்
டியூசன் போகணும்
பொய்சன் திண்டாலும்
டியூசன் போகணும்

பாஸ் மார்க்ஸ் எடுகாட்டி
பாழுங்கிணத்தில விழுந்துடு
பெய்லாகி ஊடு வந்தா
பொய்லர் தண்ணி ஊத்திடுவன்

பக்கத்தூட்டு காரிக்கு
பகட்டாகச் சொல்லணும்
பார்த்தியா என் பிள்ளை
பாஸாகி விட்டான் எண்டு.

LEAVE A REPLY