கடற்கரை வீதியிலுள்ள பாலத்தால் இடம்பெறும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

0
114

(M.T. ஹைதர் அலி)

unnamedஓரிரு நாட்களுக்கு முன்பாக காத்தான்குடி கடற்கரை ஓரமாக அமைந்துள்ள வீதியினுடைய பாலத்திற்குள் முச்சக்கர வண்டியுடன் அதில் பயணித்த கர்ப்பிணித்தாயும் விழுந்த செய்தியானது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறுக்கிற்கு அறிய கிடைத்ததோடு இதனைக்கருத்திற்கொண்டு அவ்விடத்திற்கு நேரில்சென்று நிலைமைகளையும் பார்வையிட்டார்.

இவ்வீதியினை அபிவிருத்தி செய்வதற்காக நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக இப்பாலத்தை அன்டிய இரு பகுதிகளிலும் தகர பீப்பாக்களில் மண் நிரப்பப்பட்டு இரு ஓரங்களிலும் நிறுத்தப்பட்டு இரவு நேரங்களில் இவ்வீதியால் பயணிக்கும் மக்களின் நன்மை கருதி ஒளித்தெறிப்படையக்கூடிய வகையில் வர்ணங்களும் பூசப்பட்டால் இதனூடாக பயணம் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும் என்றவகையில் இதற்குரிய வேலைகள் 2016.08.11ஆந்திகதி (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள் இவ்வீதியால் பாதுகாப்பான முறையில் பயணிக்க வழி வகுப்படவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி நகர சபை செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோரை அவ்விடத்திற்கு வரவழைத்து அதற்குரிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வழங்கினார்.

LEAVE A REPLY