மிருகங்களை வேட்டையாடும் வாய்வெடியை தம்வசம் வைத்திருந்த நபர் கைது

0
111

(அப்துல்சலாம் யாசீம்-)

Arrested44திருகோணமலை- வெலிப்பிட்டிய பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் ஹக்கபடஸ் என்றழைக்கப்படும் வாய்வெடியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை நேற்றிரவு (09) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ-தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே றம்பண்டா (48வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹக்கபடஸ் என்ற வாய் வெடியை வைத்துக்கொண்டு மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இவர் வயலுக்கு செல்லும் வேளையில் பொலிஸார் சோதனையை மேற்கொண்ட போதே இவரிடமிருந்து இவ்வெடி பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று புதன்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையம் 0262225822

LEAVE A REPLY