சாலை விபத்துக்களை தடுப்பதற்காக காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்த விழிப்பூட்டல் நிகழ்வு!

0
208

(S.சஜீத்)

20160809_214355சாரதி மற்றும் பாதசாரிகளின் கவனயீனமாக நாளந்தம் எமது பிரதேசத்தில் அதிகரித்து காணப்படும் சாலை விபத்துக்களை கருத்திற் கொண்டு காத்தான்குடி பொலிஸாரினால் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில்  நேற்று (09)  பொதுமக்களுக்கு சாலை விபத்துக்கள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்வுவோன்று இடம்பெற்றன.

இதன் போது கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்று பதிவான பாரிய சாலை விபத்துக்களும் அவ்விபத்துக்கள் ஏற்பட்டமைகான சாரதி மற்றும் பாதசாரிகளின் தவறுகளையும் உணர்த்தும் வகையில் வென்திரையிட்டு விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக பல படிப்பினைகளைப் பொதுமக்கள் பெறக்கூடிய பல காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

காத்தான்குடி பொலிஸார் சாலை விபத்துக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி பொதுமக்கள் மத்தியில் இப்படியான விழிப்பூடல் நிகழ்வுகள் பலதினை முன்னேடுத்து வறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20160809_214957 20160809_215034 20160809_220001

LEAVE A REPLY