அமெரிக்காவுக்கு துருக்கி எச்சரிக்கை

0
124

160717090503_cn_fe_2965490hஅரசுக்கு எதிராகச் செயல்படும் மதகுரு ஃபெதுல்லா குலெனை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால் தங்கள் நாட்டுடனான உறவை அமெரிக்கா தியாகம் செய்ய நேரிடும் என்று துருக்கி நீதித்துறை அமைச்சர் பெகிர் பொஸ்தாக் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் மத குருதான், கடந்த மாதம் தோல்வியில் முடிந்த துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் செயல்பட்டவர் என்றும், அவர் அதற்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் துருக்கி கூறுகிறது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை குலென் மறுத்துள்ளார்.

அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று சொல்கிறது அமெரிக்கா.

ஃபெதுல்லா குலென், துருக்கியில் இருந்து தானாக வெளியேறி பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY