42 ஆசிரியர்களில் ஒருவரின் இடமாற்றத்தையாவது ரிசாத் நிறுத்திக் காட்டட்டும் – தவம்

0
129

(ஜமால்)

unnamedஅக்கரைப்பற்று பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் 42 ஆசிரியர்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந் இடமாற்றம் தற்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திடீர் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்ககள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இவ் இடமாற்றமானது அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளருக்கு அரசியல் அழுத்தத்தை பிரயோகித்து முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் தவம் இந்த இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு இடமாற்றத்திற்குள்ளான 42 ஆசிரியர்களும் ஐக்க்கிய தேசியக் கட்சிக்கும், தேசிய காங்கிரஸூக்கும் அகில மக்கள் காங்கிரஸூக்கும் தேர்;;தல் காலத்தில் ஆதரவு வழங்கியவர்கள்.

இவர்களின் பெயர் பட்டியலை வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கொடுத்து உடன் இடமாற்றம் செய்ய வேண்டும் என தவம் உத்தரவிட்டுள்ளார். இதன் பின்னணியில் இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளதாக கல்விப் பணிப்பாளருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த இடமாற்றம் தொடர்பில் அக்கரைப்பற்றில் உள்ள 22 பாடசாலைகளின் அதிபர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கையொப்பமிட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்

42 ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு பெயர் பட்டியலை வழங்கிய தவம் ‘ இவர்களை இடமாற்றம் செய்துவிட்டு என்னை சந்திக்கச் சொல்லுங்கள். 42 ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காரர்களும் இடமாற்றப்பட்டுள்ளார்கள். முடிந்தால் அவர்களில் ஒருவரையேனும் அமைச்சர் ரிசாத் நிறுத்திக் காட்டட்டும் என சவால் விடுத்து பேசியுள்ளார்.

இவ்வாறு இடமாற்றத்திற்குள்ளாகியுள்ள 42 ஆசிரியர்களில் ஒருவர் கிட்னி நோயினால் பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY