சந்திரிக்காவுக்காக வெட்டிய குழியில் மஹிந்த விழுந்தார்: எஸ்.பி. திஸாநாயக்க

0
191

mr_ch-425x264முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக வெட்டிய குழியில் மஹிந்தவே விழுந்தார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை – சேத்சிரிபாய பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

கட்சியின் யாப்பில் பல விடயங்களை தனக்கு சாதகமாக அமைத்துக்கொண்ட மஹிந்த, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்குத்தான் கட்சித் தலைவர் பதவியில் இருக்க முடியுமென்ற முறையொன்றை கையாண்டார்.

இது மஹிந்தவால் சந்திரிக்காவுக்கு எதிராக வெட்டப்பட்ட குழி அதைத்தான் இன்று அவர் அனுபவித்து வருகின்றார். இந்த முறையில்தான் தற்போது மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவராக இருக்கின்றார் என அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY