முஸ்லிம்களின் மீள்குடியேற்றப்பிரச்சினைகள் உடனடித்தீர்வு காணப்படவேண்டும்: ஜுனைட் நளீமி

0
150

junaid-naleemiயுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டு மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது காணி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும். அத்தோடு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களது விசாரணைகள் விரைவு படுத்தப்பட்டு விடுதலைசெய்யப்படவேண்டும் என மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் குழுவின் பிரதித்தலைவர் ஜுனைட் நளீமி இன்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் ஆரம்ப அமர்வில் கருத்துதெரிவித்தார்.

பிரதம மந்திரியின் நேரடி கண்காணிப்பின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இச்செயலணி இன்று தனது மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஆரம்ப அமர்வினை வாழைச்சேனை பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜுனைட் நளீமி,

நாட்டில் யுத்தத்திற்கு பிந்திய சூழலில் அண்மைக்காலமாக மாவட்டத்தில் இடம்பெயர்வை மேற்கொண்டவர்களுக்கான அடிப்படை வசதிகளும் நிவாரணங்களும் வழங்கப்பட்டுவருகின்றது. ஆனால் மிக நீண்டகாலமாக விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள,குடியமர்வதில் காணி ஆவணங்கள்,காணிகள்,மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிலஅதிகாரிகளினால் இனத்துவ புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. சிலஅதிகாரிகள் தமது இலாபங்களுக்காக இத்தகைய இனத்துவ பார்வையை மேற்கொண்டு அப்பாவி தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் மத்தியில் பிரச்சனைகளை ஏற்படுத்த முனைகின்றனர். மிக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட சகோதர இனமக்களுக்கு காணிகள்,காணிஆவணங்கள்,அடிப்படைவசதிகள் வழங்கப்பட்டபோதும் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக இடபெயர்வு செய்யப்பட முஸ்லிம்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறே மாவட்டத்தில் விவசாயிகளும் தமது நிலங்களை இழந்தும், இழக்கவேண்டியும் உள்ளது. உன்னிச்சை,உறுகாமம்,காயன்குடா,பொத்தானை,கள்ளியங்காடு,கள்ளிச்சை,காரமுனை, ஜப்பார்த்திடல் போன்ற சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமமக்கள் தீர்வின்றி வாழ்கின்றனர்.

அதே போன்று மைளந்தனை,வாகனேரி, சிப்பிமடு, புனானை போன்ற கிராமங்களை சேர்ந்த தமிழ், சிங்கள, சகோதர இனங்களும் மீள்குடியேற்றம் தொடர்பிலான பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்பிரகாரம் இவர்களது பிரச்சனைகளை விரைவில். தீர்ப்பதற்கான பொறிமுறையினை மேற்கொள்ள வேண்டும்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகளை விரைவில் விடுவிப்பதற்கான நீதிப்பொறி முறை ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறே தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மீதான விசாரணை துரிதப்படுத்துவதற்கான விசேஷட நீதிப்பொறிமுறை ஏற்படுத்தவேண்டும். ஏனெனில் அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. இதன் மூலமே நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

காலை 9.30க்கு ஆரம்பமான இவ்வமர்வில் செயலணியைச்சார்ந்த 11 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். 5சிங்களவர், 5தமிழர் 01முஸ்லிம்களைக்கொண்ட அங்கத்தவர்கள் இதன் உறுப்பினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இச்செயலணியின் அதிகார எல்லை செயற்பாடு,மற்றும் இதன் அமர்வுகள் குறித்த போதிய தகவல்கள்,மக்கள் மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரல்கள் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவது ஒரு குறை பாடாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY