பொத்துவில் தொகுதி இளைஞர்களுக்கு YOUTH GOT TALENT திட்டம் – சாஹிர் MP

0
116

(சப்னி அஹமட்)

unnamed (2)எதிர்கால எமது இளைஞர்களின் நன்மை கருதி பொத்துவில் தொகுதியில் உள்ள பொத்துவில், ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், போன்ற பிரதேச செயலகங்களுக்கு YOUTH GOT TALENTஎனும் திட்டத்திம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொத்துவில் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எல்.எம். சாஹிர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஒவ்வொரு துறைகளிளும் இளைஞர்கள் படும் இன்னல்கள் அதற்கு நீங்கள் எவ்வாறு முகம் கொடுத்து செயற்படுகிறீர்கள் என்பதை நான் நன்கு உணர்ந்தவன். அவைகளை தாண்டி அந்த வலிகளை உணர்ந்துதான். இன்று எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களாகிய உங்களின் தேவைகள் கருதி என்னால் 57 வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து உங்களோடு கலந்துரையாடி அவைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உங்களுக்கான வளங்களை நான் பெற்றுத்தறவுள்ளேன் என்று தெரிவித்தார்.

பொத்துவில் தொகுதி எதிர்கால இளைஞர்களுக்கு YOUTH GOT TALENTஎனும் திட்டத்தின் கீழ் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளுக்காக 57 வேலை திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாவும் இதன் மூலம் இளைஞ்சர்கள் அதிக நன்மைகளை பெற முடியவுள்ளதுடன் வேலைத்திட்டங்கள் விரைவில் அனைத்து பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த வேலை திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக 200க்கும் மேற்பட்ட கழங்களுடனான எதிர்காலத்தில் இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றியும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் பிரதேச செயலகங்களில் செயலாளர்களின் தலைமையில் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY