ஈக்வேடரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

0
90

201608091459513921_46-magnitude-earthquake-in-Ecuadoran-capital-Quito_SECVPFதென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் 4.6-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நள்ளிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குவீடோவின் வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், 5 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் வீடுகளைவிட்டு வெளியேறி, வீதிகளில் குவியத் தொடங்கினர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் ஈக்வேடர் நாட்டை பதம்பார்த்த 7.8 ரிக்டர் அளவிலான கொடூர நிலநடுக்கத்துக்கு 673 பேர் பலியாகினர்.சுமார் 6 ஆயிரம் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY