கடற்கரையில் அமர்ந்திருந்த பெண் அணிந்திருந்த நகைகளை அபகரித்துச் சென்றவர்களில் ஒருவர் கைது

0
156

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrest goldமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரையில் பொழுது போக்கிற்காகச் சென்றிருந்தவேளை பெண் அணிந்திருந்த நகைகளை அபகரித்துச் சென்ற திருடர்களில் ஒருவரை நேற்று (08) திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த ஜோடியொன்று ஏறாவூர் சவுக்கடிக் கடற்கரைக்கு பொழுபோக்கிற்காக சென்றுள்ளது.

இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது சவுக்கு மரக் காடுகளுக்குள் இருந்து திடீரெனப் பிரவேசித்த மூவர் பெண் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியையும், 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பென்ரனையும் அபகரித்துக் கொண்டு சவுக்கு மரக் காட்டுக்குள் மாயமாய் மறைந்துள்ளனர்.

நகைகளைப் பறிகொடுத்த ஜோடி இதுபற்றி பொலிஸில் முறையிட்டதும் நகைக் கொள்ளையர்களில் ஒருவரான மயிலம்பாவெளியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய இருவரும் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY