தயா மாஸ்டருக்கு அழைப்பாணை

0
495

daya-masterவிடுதலை புலிகளின் முன்னாள் பேச்சாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக, தீவிரவாத தடுப்புப் பிரிவினர் (TID) வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், வவுனியா நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பில், நாளை (10) தன்னை ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அவருக்கு எதிரான வழக்கிலிருந்து கடந்த ஜூலை 04 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் குறித்தான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவரும் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Thinakaran

LEAVE A REPLY