பொரலஸ்கமுவ பள்ளிக்கு உடனடியாக சி.சி.ரி.வி. கமரா பொருத்த நடவடிக்கை

0
276

ctccam1தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பொர­லஸ்­க­முவ பள்­ளி­வா­ச­லுக்கு உட­ன­டி­யாக சி.சி.ரி.வி. கமரா ஒன்­றினைப் பொருத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்வாக சபைத் தலைவர் ரிஸ்வி பரீன் கௌஸ் தெரி­வித்தார்.

நேற்று முன் தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு தெற்கு பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான பொலிஸ் மா அதிபர் பெரேரா, பொர­லஸ்­க­முவ பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்­லிம்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளையும் பௌத்த குரு­மார்­க­ளையும் அழைத்து பொர­லஸ்­க­மு­வயில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடத்­தினார்.

இந்த நாடு சகல மக்­க­ளுக்கும் சொந்­த­மா­ன­தாகும். இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு சகல உரி­மை­களும் உள்­ளன. முஸ்­லிம்­களும் பௌத்­தர்­களும் இந்­நாட்டில் சமா­தா­ன­மாக ஒற்­று­மை­யுடன் வாழ வேண்டும்

. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படக் கூடாது என்றார்.

அப்­ப­குதி மக்­களும் பௌத்த குரு­மார்­களும் முஸ்­லிம்­களும் தாம் சமா­தா­ன­மாக ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தாக உறு­தி­ய­ளித்­தனர். பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கி­ய­வர்கள் இனங்­கா­ணப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரி­வித்தார்.

இதே­வேளை கொழும்பு பிர­தே­சத்­தி­லுள்ள சி.சி.ரி.வி கமரா பொருத்­தப்­ப­டா­துள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளிலும் உட­ன­டி­யாக சி.சி.ரி.வி கமரா பொருத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை பள்­ளி­வாசல் நிர்­வாகம் மேற்­கொள்ள வேண்­டு­மென தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இதே­வேளை, குறித்த பள்ளிக்கு நேற்று முஜிபுர் ரஹ்மான் எம்.பியும் சென்றிருந்தார்.

#Vidivelli

LEAVE A REPLY