மெக்சிகோவை தாக்கிய ‘ஏர்ல்’ புயல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

0
93

201608090541597549_Mexico-struck-Earl-storm-toll-rises-to-40_SECVPFமெக்சிகோவின் கிழக்கு பகுதியை கடந்த சனிக்கிழமை ‘ஏர்ல்’ புயல் தாக்கியது. அதன் தொடர்ச்சியாக அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. இயற்கையின் இந்த சீற்றத்தால் பியூப்லா மற்றும் வெராகுருஸ் ஆகிய மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

கனமழையின் காரணத்தால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

மரங்கள் வேரோடு சாய்ந்தன. மலை அடிவாரங்களில் உள்ள வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்து தரைமட்டமாயின. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று பியூப்லா மற்றும் வெராகுருஸ் மாகாணங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நிலச்சரிவின் போது மண்ணில் புதைந்தும் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையில், மெக்சிகோவின் மேற்கு பகுதியை ‘ஜேவியர்’ புயல் தாக்கியது. இந்த ஜேவியர் புயல் மெக்சிகோவின் தென்பகுதியையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY