கால்நடை ​வைத்தியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டம்

0
174

thumb_large_doctorஅரச கால்நடை வைத்தியர்கள் 48 மணிநேர பணிபுறக்கணிப்பில் இன்று காலை 8 மணி முதல் ஈடுபட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ. சீலநாத தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விலங்கு உற்பத்தி, சுகாதார துறையில் அரசியல் திருத்தம், சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று சந்தைகளில் இறைச்சிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் இறைச்சிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெறாது என அரச கால்நடை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY