இரவு நேர ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட சுழற்பந்து வீச்சாளருக்கு அபராதம்

0
151

201608081834106899_Steve-O-Keefe-handed-10000-Dollar-fine-by-Cricket-Australia_SECVPFஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே. இவர் இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்தார். இவருக்கு பல்லேகெலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பீல்டிங் செய்யும்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் தனது சொந்த ஊரில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த சனிக்கிழமை ஸ்டீவ் ஓ’கீபே புறநகர் கடற்கரை நகரமான மேன்லியில் உள்ள ஸ்டெய்னே ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு திரும்பும்போது தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விதிமுறை மீறல் குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்த தகவல் ஓ’கீபே விளையாடும் நியூ சவுத் வேல்ஸ் அணியின் நி்ர்வாகத்திற்கு தெரிய வந்தது. அப்போது அவர் வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக தெரியவந்தது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நியூ சவுத் வேல்ஸ் அணி அவருக்கு 10 ஆயிரம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது.

LEAVE A REPLY