காத்தான்குடி விபத்து: ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்ட சலீம் வபாத்

0
154

589e1024-22c2-40f9-b8ad-1729c9c19136(விசேட நிருபர்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி கர்பலா வீதியிலுள்ள நூறானிய்யா சந்தியில் மோட்டார் சைக்கிளும் சிறிய லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த எம்.முகம்மது சலீம்(52) என்பவர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்கை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் லொறியை செலுத்தி வந்த சாரதியான ரி.பிரசாந்தன் என்பவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரை இன்று செவ்வாய்க்கிழமை(9.8.2016) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்;த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY